பெல்ஜியத்தில் சைக்கிள்களில்; பணிக்குச் செல்வோருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது நேற்று முதல அமுலுக்கு வந்துள்ளது. சைக்கிளில் பணிக்குச் செல்வோருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டம் பற்றி தனியார் நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி மாதத்தில் உடன்பாட்டிற்கு வந்தன. இதன்படியே தற்போது ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மாதாந்தச் சம்பளத்துடன் ஊக்குவிப்புத்தொகை வழங்கப்படும். பாரம்பரிய சைக்கிள்;கள் மாத்திரமல்லாது மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள்;களை பயன்படுத்துவோருக்கும் ஊக்குவிப்புத்தொகை வழங்கப்படும்.