பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர்கள் மீண்டும் சேவையில்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளனர். அதன்படி இன்று முதல் கலை பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகளில் வழமை போன்று இடம்பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீட சங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவும், அவரது மகனும் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 14ஆம் திகதி முதல் பரீட்சை கடமைகள் உள்ளிட்ட சகல கடமைகளையும் பேராசிரியர்கள் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
