பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்களை வழங்க நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பிரதி உபவேந்தர் பேராசிரியர் அத்துல ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஆகக் கூடுதலான மாணவர்களுக்கு இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவது இலக்காகும். பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கற்கும் காலப்பகுதியில் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
