இன்று பிற்பகல் ஒரு மணி இரண்டு நிமிடமளவில் பேரூவளையிலிருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் கடல் பரப்பில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது 3 தசம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததென புவி சரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்வு மக்கொன, களுத்துறை, பெந்தொட்டை, பிலியந்தல போன்ற பிரதேசங்களில் உணரப்பட்டதாதக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இது குறித்து அவசியமற்ற வகையில் பீதி கொள்ளத் தேவையில்லை என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.