Home » பொதுப் போக்குவரத்துச் சேவையை முறையான விதத்தில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

பொதுப் போக்குவரத்துச் சேவையை முறையான விதத்தில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Source
Share Button

பொதுப் போக்குவரத்துச் சேவையை கவர்ச்சிகரமான தரமான சேவையாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். தற்சமயம் பொதுப் போக்குவரத்துச் சேவைக்கான கேள்வியும் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். பொதுப் போக்குவரத்துத் துறைக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது பற்றிக் கருத்துவெளியிட்டார்.

ரெயில்வே, பஸ் போக்குவரத்துத் துறைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முறையான எரிபொருள் விநியோகம் அவசிமாகும். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பகங்கள் ஊடாக தனியார் பஸ் வண்டிகளுக்கு இரவு நேரங்களில் எரிபொருளை விநியோகிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

பார்க் அன்ட் ட்;ரைவ் என்ற வேலைத்திட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை நிறுத்திவைப்பதற்காக அறவிடப்படும் கட்டணங்களும் குறைக்கப்பட இருக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

அலுவலக சேவை நேரத்தை இலக்காகக் கொண்டு புதிய ரெயில் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் சம்பள நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ரெயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக அவற்றை ஒருவருடத்திற்கு குத்தகைக்கு விட தீர்மானிக்கப்பட்டது

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image