பொதுமக்கள் சேவையினை நிறைவேற்றாமை தொடர்பில் அரச அதிகாரிகள் காரணங்களை முன்வைக்க முடியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
பொதுமக்கள் சேவையினை நிறைவேற்றாமை தொடர்பில் அரச அதிகாரிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணங்களை முன்வைக்க முடியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கிடையில் முரன்பாடுகளை ஏற்படுத்தாது உயர்ந்த பட்ச மக்கள் சேவையினை மேற்கொள்வது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும என்றும் அவர் குறிப்பிட்டார்;. பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.