பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களின் பலன் கிடைப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களின் பலன் கிடைப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தள்ளார். கடந்த வருடம் ஜீலை மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடத்தின் ஜீலை மாதத்தில்; இறக்கமதிச் செலவு 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. இதேவேளை ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த போது நாட்டின் மொத்த வருமானம் ஆயிரத்து 232 தசம் நான்கு பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. குறித்த காலப்பகுதியில் மொத்த செலவு மூவாயிரத்து 539 பில்லியன் ரூபாவாகும். மொத்த உற்பத்திக்கு சமாந்தரமாக அரச வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பில பிட்டிய தெரிவித்தார்.
