ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய காலப்பகுதியில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்சி என்று அதன் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சரியான தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய தலைவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கி வெற்றியீட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.