பொருளாதார சவாலை வெற்றி கொள்வதற்காக அரசாங்கம் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்

ஆக்கத்திறனின் ஊடாக நாடொன்றின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையுடன் கூடிய வழியை உருவாக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் கருத்து வெளியிட்;டார். இதன்போது, 269 தங்க விருதுகள் வழங்கப்பட்டன. பொருளாதாரம், கடன் முகாமைத்துவம் போன்ற துறைகளில் இலங்கை பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் கூறினார். சர்வமதத் தலைவர்கள் கிராமிய மட்டத்திலிருந்து வழங்கும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமாவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
