Home » பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டல்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டல்

Source
Share Button

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றும் வேலைத்திட்டமே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் இலக்காக உள்ளது. எமது நிலையத்தின் ஊடாக இன்று இடம்பெற்ற சுபாரதி

நிகழ்ச்சியி;ல் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். அரச நிறுவனங்களை பராமரிப்பதற்காக ஏற்படும் நஷ்டத்தை முழுமையாக குறைக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார். விவசாயம், ஏற்றுமதி பயிர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, அதன் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image