பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரும்பான்மை நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கைக்கு பல்துறை நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கூடிய, தொடர்புகளுடனான உதவித் திட்டங்கள் அவசியம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதுபற்றி கருத்து வெளியிட்டார்கள்.
