பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான செயற்றிட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான யோசனைகளை உள்ளடக்கிய செயற்றிட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் கருத்து வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த செயற்றிட்டம் தயாரிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கென அரசாங்கம் முன்னெடுக்கும் குறுங்கால, இடைக்கால செயற்றிட்டங்கள் பற்றி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இதன் போது விளக்கம் அளித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரட்ன, ரவூப் ஹக்கீம், அலிசப்ரி, அனுர பிரியதர்ஷன யாப்பா, சரித்த ஹேரத் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
