Home » பொருள்கள், சேவைகள் கட்டணங்கள்- ’கிடுகிடு’ உயர்வு ! மின்கட்டண அதிகரிப்பின் எதிரொலி

பொருள்கள், சேவைகள் கட்டணங்கள்- ’கிடுகிடு’ உயர்வு ! மின்கட்டண அதிகரிப்பின் எதிரொலி

Source
மின்கட்டணம் மிகப்பெரியளவில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பொருள்கள், சேவைகளினதும் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. புகைப்பட பிரதி ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஏ 4 அளவு நகல் பிரதி 15 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையின் நகல் பிரதி 10 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சுப் பிரதிகள் வழங்குவதற்கான கட்டணமும் கறுப்பு வெள்ளைப் பிரதி 5 ரூபாவாலும் வர்ண்ணப் பிரதியொன்றுக்கு 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆடைகளின் விலையையும் 20 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து பேக்கரி பொருள்கள் மற்றும் பிற நுகர்பொருள்களின் விலைகள் 10 சதவீதம் அதிகரிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவகங்களில் விற்கப்படும் ரைஸ், கொத்து மற்றும் இதர நுகர்பொருள்களின் விலையை நள்ளிரவு முதல் 10 சதவீதம் உயர்த்தவுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image