பொலிஸ் கட்டளைச் சட்டத்தை மறுசீரமைக்க நடவடிக்கை

.
அமுலில் இருக்கும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு, தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றிய விசேட பேச்சுவார்த்தை நீதியமைச்சில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திரான் அலஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இனங்காண்பபதற்கு பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவரின் தலைமையில் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன
