நாட்டில் எந்தவித தடையும் இன்றி இன்று ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று பகல் 12 மணியளவில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ரயில்வே தலையகத்திற்கு அருகில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து வழமையான முறையில் இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார். வழமையான முறையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.