போதிய அளவிலான கோதுமை மா கையிருப்பில்

நாட்டில் போதிய அளவிலான கோதுமை மா கையிருப்பில் காணப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் சாந்த கிரிஎல்ல தெரிவித்தார். கோதுமை மா தொடர்பாக அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
