போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது
நச்சுப் பொருட்கள் சார்ந்த போதைப்பொருட்கள், அபாயகரமான ஒளடதங்கள் என்பனவற்றின் பயன்பாட்டை தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இது தொடர்பான பேச்சவார்ததை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் அண்iயில் இடம்பெற்றது. போதைப் பொருள் ஒழிப்புடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும் இணைத்து நச்சுத் தன்மையுடன் கூடிய போதைப்பொருட்கள், அபாயகரமான ஒளடதங்கள் என்பனவற்றின் பாவனையைத் தடுப்பது இதன் நோக்கமாகும். பாடசாலை மாணவர்களுக்கு இடையில் அதிகரித்துள்ளது போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருள் வர்த்தகம், பாதள உலக கும்பலின் செயற்பாடுகள் என்பனவற்றைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனதிபதி அதிகாரிகளுக்கு பணிபுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.