Home » போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Source
Share Button ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கடுவெல சுதத் கீர்த்தி துஷார எனப்படும் வெலிவிட்ட சுத்தா என்ற நபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல கொத்தலாவல பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் கடுவெல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட பிரிவினரால் அம்பலாங்கொட ஆஞ்ஞாதொல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, திட்டமிட்ட குற்றவாளியான கரந்தெனியே சுத்தாவுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த பலப்பிட்டியவைச் சேர்ந்த ரங்க, என்ற நபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். அத்துடன், கொழும்பு 15 மட்டக்குளி பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிஸ்கோ என அழைக்கப்படும் உதேனி இனுகா பெரேரா என்ற பெண், 14 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது நான்கு கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர் பிரான்ஸில் வசிக்கும் ரூபன் என்ற நபருடன் இணைந்து பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image