மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் முன்னேற்றம்

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 1மணிக்கு ஆரம்பமாகும்.
அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று நடைபெற்றன. இந்திய மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 74 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஒவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியை தழுவிக்கொண்டது.
இதேவேளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிக் கொண்ட இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றியீட்டியது. முதலில் துடு;பபெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழ்பபிற்கு 121 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
