மகா சங்கத்தினர் தொடர்பான கலந்துரையாடல் சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

வரவுசெலவுத் திடட்ம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் சுகாதாரம், புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விவாதத்தில் பங்கேற்றார். காலத்தின் தேவை கருதி மகா சங்கத்தினர் தொடர்பான கலந்துரையாடல் சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார். பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் மகாநாயக்க தேரர்களை விமர்சிக்கக்கூடாது. வரலாறு பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயம் கிடைக்கவில்லை என விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் அதனை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வரலாற்றையோ, சிங்கள பௌத்த கலாசாரத்தையோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்ற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் கூறினார்.
மாவட்ட அபிவிருத்தி சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஏற்படுத்த வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்தரிபால சிரிசேன தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சமயத் தலங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை மாவட்ட சபைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆயுர்வேத மத்திய நிலையங்களை ஏற்படுத்துவது முக்கியம் என்று விவதத்தில் கலந்து கொண்ட ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன சில்வா தெரிவித்தார். சுதேச வைத்திய துறையினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் போஷாக்கின்மை நிலை அதிகரித்திருப்பதாக பாராளுமன்ற உறுபப்pனர் ரோஹினி விஜயரத்ன தெரிவித்தார். நாட்டில் உயர் மட்டத்திலான இலவச சுகாதார சேவை காணப்பட்ட போதும் அவை தற்போது குறைவடைந்து செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்தார். சுவசிரி அம்பியுலன்ஸ் சேவையினை மேம்படுத்துவததற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபொல இன்றை பாராளுமன்ற விவாதத்தின் போது கூறினார்.
