Home » மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்    

மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்    

Source
Share Button

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழமையான சட்டத்தின் கீழ், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அடிப்படை உரிமைகளுக்கு அமைய, எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும். பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை போன்று பொதுமக்களுக்கு தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், செயற்படுவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். அரசியல் அமைப்புக்கு அமைய, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தி;ல் இன்று எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்து உரையாற்றினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

ஜனநாயக சமூகத்திற்கென தேர்தல் அவசியமாகும். இதனால், எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் எதிர்கால சந்ததியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகும். மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தம், சுனாமி உட்பட பல்வேறு அனர்த்தங்களிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்களால் முடிந்துள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image