Home » மக்களின் பிரச்சினைகளுக்கு வரவுசெலவுத் திடட்த்தில் தீர்வுகள் வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருனாதிலக தெரிவித்துள்ளார்

மக்களின் பிரச்சினைகளுக்கு வரவுசெலவுத் திடட்த்தில் தீர்வுகள் வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருனாதிலக தெரிவித்துள்ளார்

Source
Share Button

நாட்டின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அணைவரும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது அவசியம் என்று விவாதத்தல் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். வரி செலுத்தாதோரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் உணரும் பிரச்சினைகளுக்கு இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படவில்லை என, விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருனாதிலக குற்றம் சாட்டினார். தனியார் துறையில் பணியாற்றிய அதிகளவிலானோர் தொழில்களை இழந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படுவது அவசியம் என்றும் விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வலியுறுத்தினார்.

கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கான லஞ்சம் பிரதேச சபைகளின் ஊடாகவே முதலில் வழங்கப்படுவதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image