மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளின் விசாரணைஇ இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தோடர்பான முறைப்பாடுகளின் விசாரணை இரண்டாம் நாளாக இன்று செங்கலடி பிரசேத்தில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்பேது, காணாமல் போனவர்கள் தொடர்பாக, அவர்களின் உறவினர்கள் 75 பேர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளின் விசாரணைகள் இடம்பெறும்.
