Home » மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவோரைப் பாதுகாக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவோரைப் பாதுகாக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

Source
Share Button

மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தற்போதுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுள்ளார். அரசாங்கத்தைப் பாதுகாப்பதே, பாதுகாப்புப் பிரிவினதும் முப்படைகளினதும் பொறுப்பாகும். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
கடந்த போராட்ட காலத்தில் பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமை தொடர்பில் அவர் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தார். இராணுவத்தின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும். எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இராணுவத்தைப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டை குழப்புவதற்கு ஒருவருக்கும் இடமளிக்க முடியாது. அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழக மாணவரும் கைது செய்யப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி எட்டு வருடங்கள் ஆனபோதிலும் இன்னமும் தன்னைப் பல்கலைக்கழக மாணவராகக் காட்டி வருகின்றார். பாதையில் யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பாராளுமன்றம் கலையப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைதி வழியிலான எந்தவொரு மக்கள் போராட்டத்திற்கும் நாட்டில் சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பொதுமக்களின் போராட்டத்திற்கு தேவையான பலத்தை தான் பெற்றுக்கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image