மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சபரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் இருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது, அரசாங்கம் ஜனநாயக முறையில் செயல்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் நாட்டிலுள்ள இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரேரணை என்று அமைச்சர் அலி சபரி குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், நாட்டிற்கு உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கி வருவதாகவும், இறையாண்மை கொண்ட நாடு ஒன்றின் மீது எந்த வகையிலும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
மனித உரிமைகளை நியாயமான முறையில் வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசாங்கம் முன்னேறி வருகின்றது.
சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரியான பொறிமுறையின் கீழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
அந்த பொறிமுறையை நிறுவுவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அலி சபரி குறிப்பிட்டார்.
