இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாகச் செ்ல முயன்ற சமயம் நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட ஐவரை கடற்படையினர் பிடித்து மன்னாரிற்கு கொண்டு வந்தனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் செல்வது தொடரும் சூழலில் இன்று அதிகாலையும் ஐவர் அகதிகளாக தமிழகம் நோக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை இந்தியாவின் ஆளுகையில் உள்ள மணல் தீடையெனத் தெரிவித்து நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட சமயம் குறித்த தகவல் இரு நாட்டு கடற்படையினரையும் சென்றடைந்துள்ளது.
இந்த நிலையில் ஐவரும் நின்ற தீடை இலங்கையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக காணப்பட்டதனால் இலங்கை கடற்படையினர் சென்று ஐவரையும் மன்னாருக்கு மீட்டுவந்துள்ளனர்.
இவ்வாறு மீட்டுவரப்பட்ட ஐவரில் 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குகின்றனர்.
AR