மரக்கறி, தெங்கு, தேயிலை, கறுவா ஆகிய பயிர்களுக்கு பயன்படுத்தும் உரத்தின் விலை 50 வீதத்தினால் குறைவடைந்திருப்பதாக கொமர்ஷல் உர கம்பனி; அறிவித்துள்ளது. நெல் மற்றும் சோளச் செய்கைக்கு அரசாங்கத்தின் உர வேலைத்திட்டத்தின் கீழ் இரசாயண பசளை வழங்கப்படுகிறது. ஏனைய பயிர்களுக்கான பசளை இன்மையினால் அதுபற்றி விவசாயிகள், விவசாய அமைச்சிற்கு முறையிடுவதாக கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் கலாநிதி ஜெகத் பெரேரா தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு நெல் மற்றும் சோளம் தவிர ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய கூட்டுப்பசளை தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அரச உர கம்பணிகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.