இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் ஜூன் 15 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட மருந்து வகைகளின் விலை 16% குறைக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.