Home » மலையக தமிழ் சமூகத்தை ஏனைய சமூகத்துடன் இணைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

மலையக தமிழ் சமூகத்தை ஏனைய சமூகத்துடன் இணைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Source
Share Button

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது என்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாகவும், வேறு சிலர் அதில் தோல்வியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற வேளையில் இதனைக் குறிப்பிட்டடார்.
23 வருடங்களுக்கு முன்னர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்த மருந்துப் பொருட்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருந்துப் பொருட்களை கையளித்தார்.
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சுக்குக் கீழ் கொண்டுவரும் அதேவேளை, தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மக்களைப் போன்று மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களும் தமது சொந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மற்றும் அவற்றில் வீடுகளை அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image