இலங்கை மண்ணில் மலையக மக்கள் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மெதடிஸ்த திருச்சபை, இலங்கை திருச்சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் என்பவற்றின் இணை ஏற்பாட்டில் மாண்புமிகு மலையக மக்கள் என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் 200 வருடவரலாற்றிற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் கூட்டு நன்றி வழிபாடு 29-01-2023 ஞாயிறு ஹட்டன் மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெறுகின்றது.
இலங்கை திருச்சபையின் பேராயர்.லட்சுமன் துசாந்த ரொட்ரிகோ, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் வண.எபிநேசர் ஜோசப் ஆகியோரின் தலைமைத்துவத்தில், தேசிய கிறிஸ்தவ மன்ற பொதுசெயலாளர் அதன் திருச்சபைகளின் பேராயர்கள், குருமார்கள், சர்வமத தலைவர்கள், பொதுமக்கள், மலையக சமூக பிரதநிதிகள் ஆகியோரின் பங்களிப்பில், இக்கூட்டு நன்றி வழிபாடு நடைபெறுவது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வழிபாடாக இது அமைவது குறிப்பிடதக்கது.
இதன் கூட்டு இணைப்பாளர்களாக இலங்கை திருச்சபை வண.சத்திவேல், வண.மைக்கள் சுவாமிநாதன், திரு.ரெல்ஸ்டன் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வண.செங்கன் தேவதாசன் ஆகியேரின் இணை ஒருங்கிணைப்பில் இவ்வழிபாடு நடைபெறுவதோடு. திருச்சபை சமூகமாக கடந்த 200 ஆண்டுகள் இலங்கை மண்ணுக்காக உழைத்து இன்னும் ஒரு அடிமை சமூகமாக வாழும் மலையக மக்களின் வாழ்வுப் பயணத்தில் அதன் முழுமையான விடுதலைக்கு பங்களிப்பு செய்hமை திருச்சபை விலகி நின்றமைக்கு மனவருந்தி இறைவனிடமும், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோரும் அனையாளமாகவும், தொடாந்து மலையக சமூக விடுதலை பயணத்தில் மலையக மக்களுடன் இணைந்து பயணிப்பதற்கான உறுதி மொழியை இறைவனின் சமூகத்தில் எடுப்பதற்குமான வரலாற்று சிறப்புமிக்க வழிபாடாக இவ்வழிபாடு அமைவது இதன் சிறப்பம்சமாகும்.
இவ்வழிபாட்டின் நிறைவில் திருச்சபை சமூகமாக மலையக மக்களுடன் ஒன்றினைந்து பொது கலாச்சார நிகழ்வும், ஊர்வலமும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து DKW மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் மலையக சமூக பிரதநிதிகளுடன் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பொது மக்களும் கலந்து சிறபிப்பதபு குறிப்பிடதக்கது.
AR