பலத்த மழை பெய்து வருவதினால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, பசறை, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல, பஸ்கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மழை தொடர்வதனால் வெள்ள நிலை ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகிறது. ஆகையினால் அவதானத்தடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதனை முகாமைத்துவம் செய்வது குறித்து மாவட்ட மத்திய நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.