மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் இன்று ஆரம்பம்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் இன்று ஆரம்பமாகிறது. மார்பகப் புற்று நோயாளர்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கிடைக்கும் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். வருடாந்தம் ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் அதனை குணப்படுத்திக் கொள்ள முடியும். ஆரம்பகட்டத்தில் இதனை கண்டறிந்து கொள்வதன் மூலம், அடிப்படை அறுவை சிகிச்சையை மாத்திரம் மேற்கொண்டு, உடலில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்து, குறைந்த செலவில் எளிய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேசிய புற்றுநோய் ஒழிப்புத் திட்டம், மாகாண வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் சம்பந்தமான பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை இம்மாதம் ஏற்பாடு செய்துள்ளது.
