Home » மாற்றுத் திறனாளிகளின் சேமநலலுக்காக புதிய வேலைத்திட்டம்

மாற்றுத் திறனாளிகளின் சேமநலலுக்காக புதிய வேலைத்திட்டம்

Source
Share Button

புலம்பெயர் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவற்றில் ஆங்கில மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டக் குழுநிலை மீதான விவாதம் இன்று பத்தாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார, தூதரகங்களின் சேவைக்கு புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார். நேர்முகப் பரீட்சையின் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பதற்காக 30 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள உரையாற்றுகையில், தொழிலாளர் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்த பின்னரே  அதனை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றம் பொறுப்புக் கூறும் சம்பள சபை ஒன்று அமைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுகளின் வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்டும் என்றும், நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் நிவாரணம் வழங்கி, தாமதமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நடுத்தர வருமானம் பெறுவோருக்கு 12 வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. வெளிநாட்டில் தொழில்புரிவோரும் டொலர்களை செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்ய முடியும். 24 சுற்றுலா தலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவை அபிவிருத்தி செய்யப்படுவதோடு, சில சுற்றுலாத் தீவுகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணி வங்கியும் ஆரம்பிக்கப்படும். 116 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

தற்போது நாட்டில் விசேட தேவையுடைய சமூகத்திற்கு வழங்கப்படும் அக்கறை போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார். சட்ட மறுசீரமைப்புக்களின் மூலம் அவர்களின் சேமநலனை அதிகரிக்க வேண்டும். இறக்குமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். பொருளாதார மறுசீரமைப்பு மாத்திரம் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமாந்த, வருடாந்தம் எட்டாயிரம் தொடக்கம் பத்தாயிரம் பேர் வரை மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதாகக் குறிப்பிட்டார். அவ்வாறானவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக கொழும்பிற்கு அருகில் புதிய ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவு கிடைக்க்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image