மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய பின்னரும் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 12 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் காட்டியுள்ளார்.
அதன்படி இந்த இழப்பை தவிர்க்க மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மின்சார சபைக்கு மானியம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S