மின்சாரப் பாவனை குறைவடைந்ததால் கடந்த வாரம் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்

மின்சாரப் பாவனை குறைவடைந்ததால் கடந்த வாரம் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த வாரம் ஒருநாளைக்கு ஒரு மணித்தியாலமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. தற்போது மக்களின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளது. அனல் மின்நிலையத்தில் மூன்றில் இரண்டு இயந்திரங்களை புதுப்பித்து இயக்கி வருவதாக திரு.ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.
