மின் கட்டணத்தை அதிகரிப்பது பற்றிய பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு

போதைப்பொருளை ஒழிப்புக்காக ஜனாதிபதி செயலணி அடுத்த வருடத்தில் ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த செயலணி அமைக்கப்படும்; என்று அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. பாடடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர், யுவதிகளும் இப்பழக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். இது குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட சமூகத்தினரை விழப்புணர்வூட்டுவதற்கு ஊடக நிறுவனங்கள் பாரிய பணியினை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். போதைப் பொருளை ஒழுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்மந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழல் இல்லாவிடின் 1988, 89ஆம் ஆண்டு காலப்பிரிவில் ஏற்பட்ட நிலை மீண்டும் உருவாகக்கூடும.; சட்டத்தை உரிய வகையில் அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சட்டத்ததை அமுல்படுத்தும்; போது பாராபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மின் கட்டணத்தை அதிகரிப்பது பற்றிய பிரேரனை நேறறு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டுவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த இந்த மக்கள், மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெருந்தோட்டத் துறைக்கு மிகுந்த பங்களிப்பு வழங்குகின்றனர். இது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். எதிர்வரும் பெப்ரவரி மாதத்தை அடையும் போது மலையக தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு பெருந்தோட்டத்தறை அமைச்சு உட்பட ஏனைய நிறுவனங்கள் இணைந்து அந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதுபற்றி ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் விவகாரங்களை மேற்கொள்வதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
