Home Against Tamileelam மீட்சியுடனான முதல் காலாண்டுடன் SDB வங்கி 2022 நிதியாண்டை ஆரம்பித்துள்ளது

மீட்சியுடனான முதல் காலாண்டுடன் SDB வங்கி 2022 நிதியாண்டை ஆரம்பித்துள்ளது

Source
Share Button

ஆண்டின் முதல் காலாண்டில் SDB வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. 2022 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் வங்கி ரூ. 181 மில்லியனை இலாபமாக பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதியில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூ. 1968 மில்லியனாக உயர்ந்திருந்தது. 2021 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 21% வளர்ச்சியாகும். மொத்த தொழிற்படு வருமானம் 19% இனால் அதிகரித்து ரூ. 2.17 பில்லியனாக பதிவாகியிருந்தது. முதல் காலாண்டு நிறைவில் காணப்பட்ட பொருளாதார சூழலில் மிகவும் உறுதியான மற்றும் சிறந்த நிலையில் காணப்படும் வங்கிகள் நிலைக்கு SDB வங்கி உயர்ந்துள்ளது. 2022 மார்ச் 31ஆம் திகதியன்று, வங்கியின் மூலதன போதுமை விகிதம் மற்றும் இதர திரள்வு விகிதங்கள் போன்றன ஆகக் குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேற்பட்டதாக அமைந்திருந்தன. மேலும், அங்கீகாரம் பெற்ற விசேடத்துவம் வாய்ந்த வங்கி எனும் வகையில், வெளிநாட்டு நாணய இடர்கள் மற்றும் நாணயப் பரிமாற்று ஏற்றத்தாழ்வுகளுக்கான SDB வங்கியின் வெளிப்படுத்தல் மிகவும் குறைவானதாக அமைந்துள்ளது. எனவே, தற்போதைய சவால்கள் நிறைந்த சந்தைச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், நாணய ஏற்றத்தாழ்வு இடர்களிலிருந்து குறிப்பிடத்தக்களவு ஒதுங்கிய நிலையில் SDB வங்கி காணப்படுகின்றது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image