வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சணை தொடர்பில் நேரில் கலந்துரையாட மீனவ அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்புகின்றனர்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களாகிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று யாழில் கூடி மேற்கொண்ட கலந்தெரையாடலின் பின்பே இவ்வாறு சந்தர்ப்பம்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவ்வாறு அனுப்பிய கடித்த்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் தாழ்மையான கோரிக்கை.
கடந்த பல வருடங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள்ளே சட்ட விரோதமாக தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக வடக்கு கடற்றொழில் சமூகம் பல்வேறு போராட்டங்களையும் நடாத்தி வந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் 2016ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சு மட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன்கொண்டு சென்று நிரந்தர தீர்வை வழங்குவீர்கள் எனவும் கடந்த வாரம் பாராளுமன்றத்திலே வெளிவிவகார அமைச்சரினால் இந்திய கடற்றொழிலாளர்களிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நடைமுறை வடக்கு கடற்றொழிலாளர்களிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபா சொத்துக்களும் இழக்கப்பட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் உள்ளது.
எனவே எமது கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக தங்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாய் உள்ளோம். எனவே இலங்கையின் இறமை உள்ள கடல்ப் பகுதியில் வெளிநாட்டு கடற்றொழிலாளர்களை அனுமதிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறும் வடக்கு மாகாண மீனவர்கள் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.
TL