Home » மீனவர்களிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டால் மீனவர்கள் ஒன்றுபடத் தயாரா என்கின்றார் சுமந்திரன்.

மீனவர்களிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டால் மீனவர்கள் ஒன்றுபடத் தயாரா என்கின்றார் சுமந்திரன்.

Source
இந்தியாவிற்கு அனுமதி வழங்குவதனை  தடுக்க வேண்டும் அதற்கு நாம் தயார் நீங்கள் ஒன்றாக வாருங்கள் நாங்களும் உங்களோட வருகின்றோம்  முழுமையாக தடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை கடற்றொழில் அமைச்சின் தீர்மானத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண மீனவ அமைப்புக்கள்  வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில்  சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவிற்கு அனுமதி வழங்குவதாக அலி சபரி தெரிவித்த உடனேயே இதற்கு நாம் உடன்பாடு இல்லை என செய்தியாளர்களிடம் நேரடியாக நான் தெரிவித்தேன். இதனை அலி சப்ரி அறிவித்தபோதே சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாகவே எதிர்ப்புத் தெரிவித்தார். இதில் எம்மிடம் இரண்டுபட்ட நிலைப்பாடிகள் இல்லை. இதற்கு சில ஆலோசணைகள் உண்டு. 2011இல் அகிலன் கதிர்காமர் இவை தொடர்பில் என்னை சந்தித்தார் 2016இல் என்னாள் கொண்டு வந்த தனிநபர சட்ட மூலத்தை 2013ஆம் ஆண்டே நான் கொண்டு வந்தேன். அது மாகாண சபையில் விவாதித்தபோது இருந்த நிலையில் காலதாமதம். பின்னர் நாடாளுமன்ற காலம் முடிந்தது. இன்று உங்கள் கையில் உள்ள 2016ஆம் ஆண்டு வரைவும் எம்மால் தயாரிக்கப்பட்டது. அப்போது சுஸ்மா சுவராச் பிரதானமாக இருந்தார். இராதகிருஸ்ணனிற்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்திய கூட்டு செயல்குழு 3 தடவை கூடியது. குருநகர் மீனவர்கள் 2013 இல் எனது தனிநபர் சட்ட மூலத்திற்கு 6மாத கால அவகாசம் கோரினர். அவ்வாறு கோரியபோது என்னுடன் அகிலன் கதிர்காமர் உடன் இருந்தார். மன்னாரில் கடலிற்கு சென்று நானும் சாள்ஸ் நிர்மலநாதனும் எல்லை தாண்டலை நேரில் அவதானித்தோம். இதேநேரம் எமது பகுதி மீனவர்களின் ரோளரால் இந்திய மீனவர்களின் ரோளரால் ஏற்படும் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்படுவதில்லை. தனிநபர் சட்ட மூலத்தை இயன்றபோது இந்திய வெளவிவகார அமைச்சின் இணக்கமும் எட்டப்பட்டதோடு அதிலே இருந்த குற்றப்பண அளவை குறைக்குமாறும் கோரியிரிந்தனர். குற்றப்பணத்தை குறைக்கவும் நான் இணங்கவில்லை. இதற்காக நானும் சிறிதரன் உள்ளிட்டோர்  கடல்வழிப் போராட்டமும் மேற்கொண்டோம். இதற்கு சில சங்கங்கள் அமைச்சரின் அழுத்தம் காரணமாக இணைந்து கொள்ளவில்லை. இந்த சட்டத்தை நிறைவேற்றினேன். இதிலே 2018 மாசியில் நிறைவேறிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது பாதுகாப்பு அமைச்சு ஆனால் இழுவை மடிச் சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டயது கடற்றொழில் அமைச்சு எனபதனையும் அறிய வேண்டும். உங்கள் விடயத்தில் நாம் முழுமையாக இணைந்து செயல்படத் தயாராகவே உள்ளோம். இந்த அனுமதியை வழங்க நாம் விடவே மாட்டோம். ஆனால் இதற்கு கடற்றொரிலாளர்களும் முழுமையாக இணைந்து நிற்க வேண்டும். அனுமதி வழங்குவதனை தடுக்கலாம் அதேநேரம் அனுமதி இல்லாமல் வருவதனையும் தடுக்க வேண்டும் அதற்கு நாம் தயார் நீங்கள் ஒன்றாக வாருங்கள் நாங்களும் வருகின்றோம். முழுமையாக தடுப்போம் என்றார்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image