மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் மண்ணெண்னை பிரச்சினைக்கு ஒரு வார காலப்பகுதியில் தீர்வு முன்வைக்கப்படும் – அமைச்சர் டக்லஸ் தேவானந்தா

மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் மண்ணெண்னை பிரச்சினைக்கு ஒரு வார காலப்பகுதியில் தீர்வு முன்வைக்கப்படும் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 10 ஆயிரம் மெட்ரிக்தொன் மண்ணெண்னையை சிங்கபூரிடம் கோருவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மீனவ சங்கங்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்ததையின்போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரவித்தார். கடந்த இரண்டரை மாதங்களாக தொழிலில் ஈடுபடமுடியாது போன மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
