இந்திய மீனவர்களிற்கு அனுமதி வழங்குவதனாலும் ஏனைய விடயங்களாலும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய இன்று பிள்ளவயார் விடுதியில் வடக்கு மீனவ அமைப்புக்களிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிலேயே ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இது தொடர்பில் கருத்துரைக்கும்போது
முல்லை மாவட்ட கடற்றொழிலாளர் சமாசப் பிரதிநிதி மரியதாஸ் ,
சிங்கள அமைச்சர்கள் இருக்கும்போது மீனவர்கள் சந்தித்த பிரச்சினையை விடவும் தமிழர் ஒருவரை நியமித்து அதிக பிரச்சினை ஏற்படுத்துகின்றனர்.
நாடாளுமன்றில் ட்ரோளர் படகிற்கு எதிராக தனி மனிதனாக சட்டம் உருவாக்கிய பெருமை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சேரும். இதேநேரம் தற்போதுள்ள கடற்றொழில் அமைச்சர் நினைத்தால் ஒரு படகேனும் ஊடுருவாமல் தடுக்க முடியும் அவர் அதில் விருப்பம் இன்றியே உள்ளார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய அச்சுதன்,
எமது அவலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாதிபதின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்ல வேண்டும். விடுதலைப் புலிகளின் காலத்தில் மக்களிடம் கேட்டு முடிவெடுத்தனர். இன்று ஆட்சியாளர் தமது முடிவை தமக்கு இசைந்த ஆக்கள் மூலம் நிறைவேற்றவே துடிக்கின்றனர்.
அவ்வாறு அவர்களிற்கு இசைந்துபோக மறுத்தால் ஜனநாயக வழியில் வரும் பொறுப்பை அமைச்சர் அதிகாரிகள் மூலம் அடாத்தாக பறிக்கின்றனர். அதற்கு உதாரணம் நானும் அன்னராசாவும் உள்ளோம். இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள் சட்ட நடவடிக்கை எடுங்கள் ஆனால் அவர்கள் மீது கை வைக்ககூடாது என்றார்.
மன்னார் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் தலைவர் யஸ்ரின் சொய்சா ,
வெளிவிவகார அமைச்சர் கடலை வெளிநாட்டிற்கு வழங்குவதாக கூறியபோது எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து உரைக்காதமை கவலையளிக்கின்றது. போரின் பின்பு உணவளிக்கும் கடலில் கை வைப்பதனையும் ஓர் இன அழிப்பின் வடிவமாகவே பார்க்கின்றோம்.
போரின் பின்பு பூச்சியத்தில் இருந்து வளர்ந்து வரும்போது மீண்டும் அறுத்து வீழ்த்தவே முயற்சிக்கப்படுகின்றது. இலங்கை இந்திய மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அகில இலங்கை தொழிலாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம்,
பல இக்கட்டுகளை ஓரளவேனும் தாண்டி வந்தாலும் இன்று கடலை இன்னுமோர் நாட்டிற்கு தாரை வார்பதனை தடுக்க வேண்டும். நாம் அழிவை சந்திக்கின்றோம் என்றபோது நாட்டை பாதுகாக்கின்றோம் என்றவர்கள் இன்று நாடே பறிபோகும்போது வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.
இன்று ஊடுருவும் இந்திய படகுகளை கைது செய்ய வேண்டாம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வளம் எமக்கு சொந்தம், எங்கள் கடல் எமக்கு வேண்டும் என்றார்.
மன்னார் மாவட்டத்தின் முன்னாள் கடல் தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மரிண்டாஸ்,
இந்தியாவின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரம் படகுகளும் எமது கடலை நம்பியே வாழ்கின்றனர். கடந்த கால பேச்சுக்களின் போது பேசியதனைவிட வேறு விடயங்களாக தீர்மானம் போட்ட சமயம் அதனைக் கண்டு தடுத்த அனுபவமும் உண்டு இந்தியாவின் ட்ரோளர்தான் ஆபத்து நாட்டுப்படகு ஆபத்து இல்லை என நினைக்க வேண்டாம். அந்த படகும் இதே ஆபத்தினையே ஏற்படுத்தும் என்றார்.
TL