Home » முகவர் நிலையங்கள் ஊடாக பயிற்சி பெறாத மற்றும் வீட்டுப் பணிக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது நாளை முதல் நிறுத்தம்

முகவர் நிலையங்கள் ஊடாக பயிற்சி பெறாத மற்றும் வீட்டுப் பணிக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது நாளை முதல் நிறுத்தம்

Source
Share Button

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேற முயன்ற 586 பேர் இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. கடந்த காலப்பகுதியில் சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய பெண்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. இவர்களில் அதிகமானோர் ஓமான், ஐக்கிய அரபுகள் எமி;ரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, அந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் கருத்துப்படி, திறமையற்ற பெண்களை வேலைக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணியகத்திற்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், முகவர் நிலையங்கள் ஊடாக பயிற்சி பெறாதத மற்றும் வீட்டுத் பணிக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது நிறுத்தப்படவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image