முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், ஒவ்வொரு முச்சக்கர வண்டியும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பின்னர், அதே பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்.
அத்துடன், விவசாய இயந்திர சாதனங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி செயல்படும் பிற சாதனங்கள், குறித்த பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பின்னர் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அவற்றைப் பெறக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
இதேவேளை, ஹம்பாந்தொட்டையில் சட்டவிரோதமான முறையில் இரண்டாயிரம் லீற்றர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்றிரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்;டுள்ளது.
ஹம்பாந்தொட்ட துறைமுகத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து டீசல் பெறப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டவிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
