முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்காத தரப்புக்கள் பற்றிய முழுமையான விபரத்துடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தக அமைச்சருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். பண்டிகைக்காலத்தில் முட்டைக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இதனால் நாட்டில் போதியளவிலான முட்டை உற்பத்தி இடம்பெறாவிட்டால் அவற்றை இறக்குமதி செய்வதன் அவசியத்தை அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.