Home » முட்டை உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படமாட்டாது என வலியுறுத்தல்

முட்டை உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படமாட்டாது என வலியுறுத்தல்

Source
Share Button

நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்டலாம் என்று சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஹேரத் முற்றாக நிராகரித்துள்ளார். முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எந்தச் சாத்தியமும் இல்லையென்றும் பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு கால்நடை உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். கால்நடை உணவுத் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் மூடப்பட்டிருந்த கால்நடை பண்ணைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இவற்றுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவோ முட்டையின் விலை அதிகரிக்கவோ சாத்தியங்கள் இல்லை என்றும் ராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஹேரத் வலியுறுத்தினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image