Home » முன்னோக்கி சிந்திக்கும் இலங்கையர்களிற்கு இலட்சிய வங்கியியல் சேவைகளை வழங்கும் முகமாக யூனியன் பிளேசிற்கு தனது நகர்புற கிளையை SDB வங்கி இடமாற்றுகின்றது
முன்னோக்கி சிந்திக்கும் இலங்கையர்களிற்கு இலட்சிய வங்கியியல் சேவைகளை வழங்கும் முகமாக யூனியன் பிளேசிற்கு தனது நகர்புற கிளையை SDB வங்கி இடமாற்றுகின்றது
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறைகளிற்கும் அனைத்து முற்போக்கான இலங்கையர்களிற்கும் வாடிக்கையாளர் மைய வங்கியியல் தீர்வுகளை வழங்குவதனூடாக உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தெளிவான நோக்கத்தை உடைய ஒரு தனித்துவமான வங்கியான, SDB வங்கியானது, சமீபத்தில் அதனது நன்கறியப்பட்ட நகர் கிளையை இல. 167, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 எனும் முகவரியிலுள்ள புதிய தொகுதிக்கு இடமாற்றியுள்ளது. புதிய கிளையானது 19 ஏப்ரல் 2023 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், அப்பிரமாண்ட திறப்பு விழாவானது தலைவர் தினித் ரத்நாயக்க மற்றும் SDB வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி பிரியந்த தலவத்த, சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள், SDB வங்கியின் வாடிக்கையாளர்கள், முக்கிய வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தனிநபர்களின் பங்கேற்போடு சிறப்பிக்கப்பட்டது.
SDB வங்கியின் நகர் கிளையின் இடமாற்றமானது போதுமான வாகன தரிப்பிடம், ATM வசதிகள் முதலிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளடங்கலாக தனிச்சிறப்பான வசதியுடன் முக்கிய பூகோள பகுதியில் ஒரு வலுவான பிரசன்னத்தை வெளிப்படுத்தும் வங்கி முகாமைத்துவத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகும்.