முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்றும் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்றும் இடம்பெற்றது. காணாமல் போனோர் அலுவலகம் முன்னெடுத்திருக்கும் இந்த விசாரனை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றும் நடைபெற்றது. இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தனர். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நாளையும், நாளை மறுதினமும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இடம்பெறும்.
