இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து கடல் வழியாக படகு மூலம் பயணித்து இந்திய ஆளுகையில் உள்ள தீடையில் இறங்கிய குடும்பத்தை அவதானித்த தமிழக மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிசார் கரையோர காவல் படையினருக்கு வழங்கியதனையடுத்து தீடைக்குச் சென்ற கரையோர காவல் படையினர் ஏழுபேரையும. மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர்.
இவ்வாறு தமிழகத்திற்குச் சென்ற ஏழுபேரும. முல்லைத்தீவு தீர்த்தக்கரையைச் சேர்ந்தவர்கள் எனவும் கணவன் மணைவி மற்றும் ஐந்து பிள்ளைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
TL