மேற்குலக நாடுகளின் தலைவர்கள் உக்ரேன் சென்றுள்ளார்கள்

மூன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரேன் தலைநகருக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்கள். ரயில் மூலம் இவர்கள் உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக உக்ரேனின் கிவ் நகரத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். உக்ரேனுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கோடு, பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோன், ஜேர்மன் நாட்டின் தலைவர் ஒலாப் ஸ்கொல்ப், இத்தாலி பிரதமர் மாரியோ ராகி ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்திருப்பதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனை இணைத்துக் கொள்வது பற்றி இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்படவிருக்கிறது.
இதேவேளை, ரஷ்யாவின் இறைமையை பாதுகாப்பதற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் உறுதி அளித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். ஆனால், சீனாவின் இந்தத் தீர்மானம் வரலாற்றுத் தவறாக மாறக்கூடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
