மேற்குல நாடுகளில் இலங்கையர்களுக்கு பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்க இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு மேலும் பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்றிட்டங்களின் மூலம் இலங்கையைச் சேர்ந்த கட்டட நிர்மாணத் துறை சார்ந்தோருக்கு அதிகளவிலான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.